பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா சம்பளம்? 

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்பட வேண்டுமென்பதே தனது நிலைப்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலைக்களுக்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் வலியுறுத்தியுள்ளார். 

200 ரூபாவினால் சம்பளத்தை அதிகரிப்பதற்கே கம்பனிகள் தயாராக உள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வி இராஜாங்க அமைச்சர், குறித்த சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், பெருந்தோட்ட கம்பனிகள் நஷ்டத்தில் இயங்கவில்லை என  கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply