இந்தியாவிலிருந்து பெரிய வெங்காய ஏற்றுமதியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு மாத்திரம் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய இந்திய அரசாங்கம், முதற் கட்டமாக இலங்கைக்கு 10,000 மெட்ரிக் டொன் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை தனியார் துறையினுடாக இறக்குமதி செய்வதா அல்லது அரச துறையினுடாக இறக்குமதி செய்வதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சுக்கள் கலந்துரையாடியிருந்த நிலையில், லங்கா சதோச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களில் 2,000 மெட்ரிக் டொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என லங்கா சதோசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன சிங்கள உடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாதாந்தம் 20,000 மெட்ரிக் டொன் பெரிய வெங்காயம் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.