தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடையாள அட்டையை வழங்குவதற்கான கால எல்லை எதிர்வரும் ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச்சான்றிதழ் இல்லாமையினால் இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நபர்களுக்காக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இதற்கு கடந்த மார்ச் 31ம் திகதி வரை கால எல்லை வழங்கப்பட்டிருந்த போதும், குறித்த கால எல்லையை நீடிக்குமாறு பிரதேச செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.