நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று(04.22) பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஏனைய கட்சியில் இணையும் போது கட்சியின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பொறுப்பேற்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின், பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் விரைவில் தீர்மானம் மேற்கொள்வார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சி உறுப்புரிமையை இழக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.