8 புதிய பிரமிட் திட்டங்கள், மக்களுக்கு எச்சரிக்கை 

இலங்கை மத்திய வங்கியினால், புதிதாக 8 நிறுவனங்கள் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த 8 நிறுவனங்களும் பிரமிட் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 
1. Beecoin App/ Sunbird Foundation
2. Fast Win (Pvt) Ltd
3. Fruugo Online App/ Fruugo Online (Pvt) Ltd
4. Genesis Business School/ Era Miracle (Pvt) Ltd
5. Isimaga International (Pvt) Ltd
6. Ledger Block
7. Qnet/Questnet 8. Ride to Three Freedom (Pvt) Ltd மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இத்தகைய சட்டவிரோத விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

8 புதிய பிரமிட் திட்டங்கள், மக்களுக்கு எச்சரிக்கை 

Social Share

Leave a Reply