பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.
நடிகை தமிதாவும் அவரது கணவரும் இணைந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 4ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.