பரீட்சை திணைக்களத்தின் கீழ் மேற்பார்வை

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான எழுத்துத் தேர்வு பரீட்சை அடுத்த ஆண்டு முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயன்முறை பரீட்சையை வழமை போன்று நடாத்தும் அதேவேளையில் நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் வருடத்திற்கு ஒரு முறை மாத்திரம் எழுத்து மூலப் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவதாக அதிகளவான பரீட்சார்த்திகள் ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த வருடத்தில் எழுத்து மூலப் பரீட்சையை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விண்ணப்பதாரர்கள்
பரீட்சை திணைக்களத்தின் கட்டளைகளுக்கு அமைவாக அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயன்முறை சோதனையில் பங்கேற்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் கீழ் மேற்பார்வை

Social Share

Leave a Reply