பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த இந்த உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று (22/11) முதல் ஜனாதிபதியின் கட்டளை அதிகாரம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.