மீண்டும் 250 ஓட்டங்களை கடந்த அணி – MI vs DC 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

டெல்லியில் இன்று(27.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

டெல்லி அணி சார்பில் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் 84 ஓட்டங்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் பும்ரா, லூக் வுட், பியூஷ் சாவ்ல, முஹமட் நபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். 

258 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. 

மும்பை அணி சார்பில் திலக் வர்மா 63 ஓட்டங்களையும், அணி தலைவர் ஹர்திக் பாண்டியா 46 ஓட்டங்களையும், டிம் டேவிட் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் மற்றும் ரஹீக் தார் சலாம் தலா 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி அணியின் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய டெல்லி அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5ம் இடத்திற்கு முன்னேறியதுடன், மும்பை அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 9ம் இடத்திலும் உள்ளது.

Social Share

Leave a Reply