முதலிடத்தை இறுகப் பிடித்துக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

லக்னோவில் இன்று(27.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

லக்னோ அணி சார்பில் அணித் தலைவர் கே.எல்.ராகுல் 76 ஓட்டங்களையும், தீபக் ஹூடா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், போல்ட், அவேஷ் கான், அஸ்வின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

197 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

ராஜஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 73 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 52 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

லக்னோ அணி சார்பில் பந்துவீச்சில் யாஷ் தாகூர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், லக்னோ அணி 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.

Social Share

Leave a Reply