Mullai Panthers அணிக்கு தொடர் வெற்றிகள்..! – NPL 2024 

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் Mullai Panthers அணி வெற்றி பெற்றுள்ளது. 

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று(28.04) நடைபெற்ற போட்டியில் Mullai Panthers மற்றும் Vavuniya Vikings அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Vavuniya Vikings அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, Vavuniya Vikings அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173  ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

Vavuniya Vikings அணி சார்பில் ஜிதர்சன் சண்முகம்பிள்ளை 41 ஓட்டங்களையும், எஸ் பானுஷன் 28 ஓட்டங்களையும், பரமசிவம்பிள்ளை நிஷாந்தன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

 Mullai Panthers அணி சார்பில் பந்துவீச்சில் கபிலன் மகேந்திரன், அருணோதயம் அஞ்சயன், சிவராஜா வினோஜ், குமாரசாமி சதுர்ஜனன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Mullai Panthers அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

Mullai Panthers அணி சார்பில், ரதுர்ஜன் 43 ஓட்டங்களையும், சிவராஜா வினோஜ் 39 ஓட்டங்களையும், பெரியசாமி ரூபன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

Vavuniya Vikings அணி சார்பில் பந்துவீச்சில் எஸ் பானுஷன், பாலநாதன் யசோதரன், டி லிங்கேஸ்வரன், சிவநாதன் மௌத்ஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் Mullai Panthers அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக Mullai Panthers அணியின் சிவராஜா வினோஜ் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply