மே தின பேரணிகளுக்கு பஸ்களை கோரி பல அரசியல் கட்சிகளும் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, தேவையான பஸ்களை வழங்குமாறு அனைத்து டிப்போக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், விசேட சுற்றுலாப் பயணங்களுக்கான பஸ் கட்டணத்திற்கமைய கட்சிகளுக்காக வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, அரசியல் கட்சிகள் மே தின பேரணிகளுக்கு தனியார் பஸ்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.