வேலை வாய்ப்பிற்காக 2000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைவாய்யிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு ஐவரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

இவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply