தரவரிசையில் லக்னோ அணி முன்னிலை

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

லக்னோவில் இன்று(30.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

மும்பை அணி சார்பில் நேஹல் வாதேரா 46 ஓட்டங்களையும், டிம் டேவிட் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

லக்னோ அணி சார்பில் பந்துவீச்சில் மோஹின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

145 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

லக்னோ அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ஓட்டங்களையும், அணி தலைவர் கே.எல் ராகுல் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய லக்னோ அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3ம் இடத்திற்கு முன்னேறியதுடன், மும்பை அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 9ம் இடத்திலும் உள்ளது.  

Social Share

Leave a Reply