இந்தியாவின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணம் முடிந்து கமல் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை கமல்ஹாசனும் உறுதிப்படுத்தியுள்ளார்.