லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைவு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 175 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 3,940 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ கிராம் நிறையுடைய‌ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 1,582 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2.3 கிலோ கிராம் நிறையுடைய‌ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 740 ரூபா‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply