நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்ட குற்றசாட்டில், நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு கடந்த 24ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக அரசியலுக்குள் வந்தமையே, தன்னுடைய  கைதுக்கான பின்னணி எனவும் தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply