இலங்கை விளையாட்டுத் துறையில் புதிய ஒழுங்குமுறை 

இலங்கையில் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் தலையீட்டை நீக்கும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஒரு முக்கிய ஒழுங்குமுறையில் இன்று(03.05) கையெழுத்திட்டுள்ளார்.

இந்த புதிய ஒழுங்குமுறையின் ஊடாக 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்திற்கமைய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 73 தேசிய விளையாட்டு சங்கங்களின் தேவைகளை உள்ளடக்கியது மற்றும் தேவைப்படும் போது நடவடிக்கை எடுப்பதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து விளையாட்டு பங்குதாரர்களின் குறைகளையும் கேட்டு, நாட்டின் விளையாட்டுத்துறையின் நலனுக்காக வழிநடத்துவதற்கான சேவைகளை வழங்குவதற்கு ஒம்புட்ஸ்மன் பதிவியொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply