கண்டி மற்றும் காலி அணிகளுக்கிடையில் நேஷனல் சுப்பர் லீக் 4 நாள் தொடரின் இறுதிப்போட்டி கண்டி, பல்லேக்கலவில் நடைபெற்றது. இந்த போட்டியில் காலி அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று முதல் முறையாக நேஷனல் சுப்பர் லீக் 4 நாள் தொடரில் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய கண்டி அணி 99 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 316 ஓட்டங்களை பெற்றது. இதில் சித்தார கிம்ஹான் 90 ஓட்டங்களையும், சஹான் கோசலா 84 ஓட்டங்களையும், அஷியன் டானியல் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசங்க மனோஜ் 3 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ், தனஞ்சய லக்ஷன், திலங்க உதேஷன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், பிரவீன் ஜெயவிக்ரம 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய காலி அணி 86.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களை பெற்றது. இதில் ரமேஷ் மென்டிஸ் 111 ஓட்டங்களையும், தனஞ்சய லக்ஷன் 47 ஓட்டங்களையும், ஷெஹான் பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும் பெற்றனர். இது ரமேஷ் மென்டிஸின் முதல் தர போட்டிகளில் 10 ஆவது சதமாகும். பந்துவீச்சில் சித்தும் திசாநாயக்க, நிம்சர அதறகல்ல, லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், புலின தரங்க 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
2 ஆவது இன்னிங்சில் துடுப்பாடிய கண்டி அணி 71 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவீன் யஸாஸ் 45 ஓட்டங்களையும், புலின தரங்க 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிஷான் பெய்ரிஸ் 5 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அசங்க மனோஜ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
176 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய காலி அணி 27.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதில் ஒஷட பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும், லக்ஷன் எதிரிசிங்க 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிம்சர அதறகல்ல, அஷியன் டானியல், புலின தரங்க ஆகியோர் தலா]ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ரமேஷ் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.