கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு 07 ஸ்ரீமத் அநகாரிக தர்மபால மாவத்தையின் ஒரு பாதை, மருத்துவ மாணவர்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக வாகன போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவக (NSBM) மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழுவினால் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.