யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்ததாக தெரிவித்த துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர, இதற்காக ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான யோசனை விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் இன்டிகோ விமான சேவை நிறுவனமும் விமானப் பயணங்களை முன்னெடுக்கவுள்ளது.
தற்போது எயார் எலையன்ஸ் விமான சேவை நிறுவனம் மாத்திரம் விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.