O/L பரீட்சைக்கு விசேட பாதுகாப்பு 

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

பரீட்சையின் போது பாதுகாப்பு பணிகளுக்காக 2000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை  நாளை(06.05) ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சையை நடத்துவதற்கான ஆரம்ப பணிகள் அனைத்து ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply