முதல் இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா..! 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 

லக்னோவில் இன்று(05.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டிழப்பிற்கு 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 81 ஓட்டங்களையும், பில் சால்ட், ரகுவன்ஷி ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும், ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

லக்னோ அணி சார்பில் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

236 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. 

லக்னோ அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 36 ஓட்டங்களையும், கே எல் ராகுல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரசல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா அணியின் சனில் நரைன் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியதுடன், லக்னோ அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 5ம் இடத்தில் உள்ளது.  

Social Share

Leave a Reply