நாட்டினுள் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.