8வது நாளாக தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் 

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(08.05) ஏழாவது நாளாகவும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இதன் காரணமாக 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(08.05) கூடவுள்ளது.

இதன்போது முன்வைக்கப்படும் பரிந்துரைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு இன்று உரிய தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply