SARS-COV-2 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மாத்திரையான Molnupiravir ஐ இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் தனியார் துறையினருக்கு தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) அழைப்பு விடுப்பதாக, இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 க்கான சிகிச்சையில் Merck, Sharp மற்றும் Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகிய மருந்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் எதிர்ப்பு மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வைத்திய நிபுணர்கள் குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இந்த மாத்திரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு அபாயத்தை 50 சதவிகிதம் குறைக்கிறது என்றும் தெரிவித்த அமைச்சர், கொவிட் 19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சில தனியார் நிறுவனங்கள் இதனை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.