மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகின்றார் முஜிபுர் ரஹ்மான்

டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரஜையான டயானா கமகே பாரளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் நேற்று(08.05) தீர்ப்பளித்திருந்தது. 

இதன் காரணமாக டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக சபாநாகர் பாராளுமன்றத்தில் இன்று(09.05) அறிவித்திருந்தார். 

இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply