ஒலிம்பிக் தீபம் ஏந்தும் அரிய வாய்ப்பு இலங்கை தமிழனுக்கு..! 

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸில் இடம்பெற்றுவரும் நிலையில் பாரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பை இலங்கை தமிழர் ஒருவர் பெற்றுள்ளார்.

பாரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்ற தர்ஷன் செல்வராஜா பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையைப் பெற்றவர்.

பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸில் கடந்த மாதம் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் பல நாடுகளின் வழியாக பிரான்ஸ் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது.

பாரிஸில் கோடைகால ஒலிம்பிக்ஸ் ஜூலை மாதம் 26 முதல் ஒகஸ்ட்  மாதம் 11 திகதி வரை நடைபெறுகிறது. இதற்கு 10,500 விளையாட்டு வீரர்கள் 329 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதேவேளை, பாரா ஒலிம்பிக் ஒகஸ்ட்  மாதம் 28 திகதி முதல் செப்டம்பர் மாதம் 08 திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் 549 போட்டிகளில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக்கில் 206 நாடுகளும், பாரா ஒலிம்பிக்கில் 184 நாடுகளும் பங்கேற்க உள்ளன.

Social Share

Leave a Reply