பரீட்சை மேற்பார்வையாளரின் சேவை இடைநிறுத்தம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பரீட்சை நிலையம் ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் முதல் நாள் பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்கள் பெறப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த வலயக் கல்விப் பணிமனை, குறித்த பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரை சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. 

குறித்த பரீட்சை நிலையத்தில் உதவி மேற்பார்வையாளராக கடமையாற்றியவர், தற்போது மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக உதவி மேற்பார்வையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 

Social Share

Leave a Reply