இரத்தினபுரி தொழிலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

இரத்தினபுரி – தும்பறை 82ஆம் பிரிவு தோட்டப் பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரும் அவரது மனைவியும்
அந்த தோட்டத்தின் பிரதி முகாமையாளரால் தாக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கு
அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்
மனோ கணேசன் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேற்று(10) சென்றிருந்தனர்.

இதனையடுத்து பெருந்தோட்ட மக்களின் பிரச்சினையில் அனைவரும் ஒன்றிணைந்து
செயற்பட வேண்டும் என மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Social Share

Leave a Reply