Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்ட முதல் அணி 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Playoffs சுற்றுக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் அணியாக தகுதி பெற்றுக்கொண்டது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியீட்டியதன் ஊடாக Playoffs வாய்ப்பினை உறுதி செய்து கொண்டது. 

கொல்கத்தாவில் நேற்று(11.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

மழைக் காரணமாக போட்டி சில மணித்தியாலங்கள் தமதமாக ஆரம்பமாகியதால், போட்டி 16 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கொல்கத்தா அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 42 ஓட்டங்களையும், நிதிஷ் ராணா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் பும்ரா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

158 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. மும்பை அணி சார்பில் இஷான் கிஷன் 40 ஓட்டங்களையும், திலக் வர்மா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஆன்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

இதன்படி, இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், மும்பை அணி 8 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும் உள்ளது. 

Social Share

Leave a Reply