அடுத்த வருடம் வாகன இறக்குமதிக்கு சாத்தியம்

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை படிப்படியாக திட்டமிட்டு மேற்கொள்ளவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், வணிகத் தேவைகளுக்கு மாத்திரம் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அடுத்த வருடம் முதல் தனியார் பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி தட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply