சுதந்திரக் கட்சிக்கு புதிய பொது செயலாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

கட்சியின் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Social Share

Leave a Reply