இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலத்த மழை மற்றும் மராபி எரிமலை வெடிப்பால் மேற்கு சுமத்ராவில் பேரழிவு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பலர் காணாமற் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் சுமாத்ராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பலர் உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.