தாமரை கோபுரத்தில் சாகசத்தில் ஈடுபட்டவருக்கு படுகாயம் 

கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரத்தில் நடைபெற்று வரும்  பாராசூட் ஜம்ப்(parachute jump) நிகழ்வில், கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

கோபுரத்தின் மேலே இருந்து குதித்த வெளிநாட்டவர், தனது பாராசூட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தின் போது காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

குறித்த நபருக்கு தலையினுள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கால்கள் மற்றும் கைகள் உணர்விழந்து இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

தாமரை கோபுரத்தில் மேலிருந்து கீழே குதிக்கு நிகழ்வு நேற்று(12.05) முதல், மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இந்த நிகழ்வினை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply