ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் இன்று (23/11) கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த சனிக்கிழமை (20/11) இடம்பெற்ற வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது, பெண்களை அவமதிக்கும் வகையில் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சி எம்.பி கருத்துக்களை வெளியிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் நேற்று (22/11) சபையில் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
அது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் பொழுதே சபாநாயகர், குட்டி ஆராய்ச்சி எம்.பி க்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
குட்டி ஆராய்ச்சி எம்.பி பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் அவர் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி இருந்ததோடு, இன்று பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.