Qualifier, Eliminator போட்டிகளுக்கான அணிகள் தெரிவு

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது Qualifier மற்றும் Eliminator போட்டிகளில் மோதவுள்ள அணிகள் தெரிவாகியுள்ளன. முதலாவது Qualifier போட்டியில் தரவரிசையில் 1ம் மற்றும் 2ம் இடங்களில் முறையே உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் தொடரின் இறுதி குழு நிலை போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமையினால், ராஜஸ்தான் அணி முதலாவது Qualifier போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பினை இழந்தது. 

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, குவகாத்தியில் இன்று(19.05) இரவு 7.30 நடைபெறவிருந்தது. இருப்பினும் போட்டியின் ஆரம்பம் முதல் பெய்த மழைக் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. 

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் தரவரிசையில் 3ம் இடத்திலுள்ளது. ஹைதராபாத் அணியும் 17 புள்ளிகளை பெற்றுள்ள போதும், Net Run Rate புள்ளிகளின் காரணமாக தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளது.  

இதன் காரணமாக தரவரிசையில் 1ம் மற்றும் 2ம் இடங்களில் முறையே உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முதலாவது Qualifier போட்டியில் மோதவுள்ளன. 

இதேவேளை, தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள பெங்களூரு அணி, ராஜஸ்தான் அணியை Eliminator போட்டியில் மோதவுள்ளது. தொடரின் முதல் 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியிருந்த பெங்களூரு அணி, இறுதியாக பங்கேற்க 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி, Playoffs வாய்ப்பினை பெற்றுக் கொண்டது.

ஐ.பி.எல் தொடரின் Playoffs சுற்று எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முதலாவது Qualifier போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

Social Share

Leave a Reply