சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் 25,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி சுகயீன விடுமுறையை அறிவித்து நேற்று(20.05) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இணையாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பள அதிகரிப்பிற்கு முன்னர் 15,000 ரூபாவினை மேலதிக கொடுப்பனவாக வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.