இலங்கையில் நிலவும் தாழமுக்கம் காரணமாக, தென் கிழக்கு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24/11) வெளியிட்டுள்ள வாநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இது அடுத்த சில மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பிரதேசமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் எனவும் வடக்கில் சில இடங்களிலும்,வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது மழை மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.