மியன்மாரின் இணையவழிக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திரமட்ட பணியை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டுதலுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
குழுவொன்று மியன்மார் மற்றும் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த குழுவினர் இலங்கையின் மஹாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்திட்டுள்ள ஆவணத்தையும் அந்த நாடுகளுக்கு கையளிக்கவுள்ளனர்.
இந்தக் குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜே.சி அலவத்துவல, சுஜித் சஞ்சய் பெரேரா, காவிந்த ஜயவர்தன, வசந்த யாப்பா பண்டார உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.
நாட்டின் இளம் தலைமுறையினரையும், ஓய்வு பெற்ற இராணுவத்தினரையும் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.