வவுனியா சிரேஷ்ட மதகுருவுக்கு கொரோனா

வவுனியாவின் சிரேஷ்ட இந்து மத குருவான, குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதம குரு, கந்தசுவாமி குருக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கொரோனா தொற்று பிரிவின் தீவிர சிகிச்சை பிரிவில் ஒட்ஸிசன் வழங்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர் ஆபத்தான நிலையினை கடக்கவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


73 வயதான கந்தசுவாமி குருக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கை மூட்டு விலகியமைக்காக சிகிச்சை பெறுவதற்காக வெளியே சென்று வந்தமையினாலேயே இந்த தொற்று ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கலாமெனவும், தாம் கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் அவதானமாகவும் இருந்து வந்த நிலையிலும் தொற்று ஏற்பட்டுள்ளதாக கந்தசுவாமி குருக்களின் மகனான கணேஷ் கந்ததாச குருக்கள் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

வவுனியாவில் கொரனோ பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், மரணங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் சுகாதர துறையினர் தெரிவிக்கின்ற நிலையில், வவுனியாவில் மக்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி செயற்படுவதை நாமும் அவதானித்துள்ளோம். கடைகளில், பொது இடங்களில் எந்தவித சமூக இடைவெளிகளை யாரும் பேணுவதில்லை, அவ்வாறு பேணுபவர்களுக்கும் பிறர் இடையூறாக இருந்து வருகின்றனர். அதனை சரியாக எந்த வியாபர நிறுவனங்களும் பேணுவதாக இல்லை. மதுபானசாலைகளில் இது மிகவும் மோசமாக காணப்படுகிறது.


களியாட்ட நிகழ்வுகளில் அதிகாமானவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களும் பாதுகாப்பாக செயற்படுவதாக இல்லை. இந்த நிலை தொடரும் பட்சத்தில் கடந்த முறை போன்று இலங்கையில் அதிகமான தொற்று வீதம் கொண்ட நகரமாக வவுனியா உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா சிரேஷ்ட மதகுருவுக்கு கொரோனா

Social Share

Leave a Reply