இலங்கை சுங்க பிரிவினரால் 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4.5 பில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோசடியில் சில முன்னணி நகை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான வழிகளில் தங்கத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமான வழிகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தினுடாக நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து படகுகளில் தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமான முறைகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.