சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்று (25) இரவு சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.

Social Share

Leave a Reply