இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வினவுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் அமெரிக்க தூதுவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டறிந்துள்ளார்.
அரசியலமைப்பினூடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.