யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று(30.05) காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத்
தௌிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.