சுகாதாரத் தொழில் நிபுணர்கள் சம்மேளனத்தின் சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று (24/11) முதல் இரண்டு நாட்களுக்கு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் தாதியர், இடைநிலை மற்றும் நிறைவு காண் சுகாதார ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து ரெபிட் அன்டிஜன் டெஸ்ட் மற்றும் வழமையான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படமாட்டது என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
