இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் நாளை ஆரம்பம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபவிருத்தி விரிவாக்கப் பணிகளின் இரண்டாம் கட்டம் நாளை (25/11) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில் ஆண்டுதோறும் கையாளும் தற்போதைய திறனில் 6 மில்லயன் பயணிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 15 மில்லியனாக அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக மொத்தம் 100 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இந்த விரிவாக்க முயற்சியானது தரிப்பிட திறனை 49 ஆக அதிகரிக்கும் அதேசமயம் 149 Check – in கவுன்டர்களை கொண்டிருக்கும் என விரிவாக்கத்திட்டக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் நாளை ஆரம்பம்

Social Share

Leave a Reply