யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள நபரொருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக
அந்த பெண்ணை அவர் தீயிட்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், சந்தேகநபருடன் அவரது தாயாரின் மயானத்தில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மெலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.