தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் மேற்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தகைய விடயங்களை முன்வைக்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கூறிவருகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கனவு கண்டு கொண்டிருப்பதாக பதிலளித்துள்ளார்.  

அரசாங்கத்தினால் பொது மக்களுக்கு நிலம் வழங்கப்படும் திட்டத்தை வரவேற்ற சுமந்திரன், அதனை சிறந்த திட்டம் என தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை களமிறக்கும் யோசனைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply