கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவித்தல்

கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பிரதேசத்தில் நாளை (08.06) இடையிடையே மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அவ்வப்போது பாதை மூடப்படும்.

வீதியில் உள்ள உறுதியற்ற பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக பாதை மூடப்பட உள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply